தொழில்நுட்பம்

OnePlus N6 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் என்6 லைட் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் ‘என்’ சீரிஸ் போன்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், ஒன்பிளஸ் என்6 லைட் போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் என்6 லைட்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>> Unisoc T7250 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

>> 4 ஜிபி ரேம்

>> 64 ஜிபி ஸ்டோரேஜ்

>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்புறம் உள்ள பிரதான கேமரா

>> 7,000mAh பேட்டரி

>> 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 4ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போன் இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது

>> இந்த போனின் விலை ரூ.16,999

SCROLL FOR NEXT