தொழில்நுட்பம்

Motorola Edge 70 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 70 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 70 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமானது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட்டில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் எட்ஜ் 70 மற்றும் எட்ஜ் 70 ஃப்யூஷன் உள்ளிட்ட மாடல் போன்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ, ஸ்மார்ட் வாட்டர் டெக்னாலஜி, டால்பி ஆடம்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்டவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 புரோ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • மீடியாடெக் டிமான்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் ப்ராசஸர்

  • 8ஜிபி / 12ஜிபி ரேம்

  • 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 6,500 mAh பேட்டரி

  • 90 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • இந்த போனுடன் சார்ஜர் வருகிறது

  • 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா. இதனோடு அல்ட்ராவைட் லென்ஸ் கொண்ட கேமராவும் உள்ளது

  • செல்ஃபி கேமராவும் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இதன் விலை ரூ.38,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT