சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி77 பவர் போன் அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
வரும் 13-ம் தேதி இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மோட்டோவின் ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ளது இந்த போன். ஒரு முறை சார்ஜ் செய்தார் சுமார் 19 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என மோட்டோ தெரிவித்துள்ளது.
மோட்டோ ஜி77 பவர்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> மீடியாடெக் டிமான்சிட்டி 6.72 இன்ச் சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 8ஜிபி ரேம்
>> 128ஜிபி ஸ்டோரேஜ்
>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 8 மெகாபிக்சல் கொண்ட கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
>> 7,000mAh பேட்டரி
>> 30 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> இதன் விலை ரூ.25,999 முதல் தொடங்குகிறது