தொழில்நுட்பம்

இசையையும் தாளத்தையும் கண்டறியலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 36

சரவணன் பார்த்தசாரதி

பிடித்​த​மான பாடலைக் கேட்​கும்​போது அதை கிடாரிலோ பியானோவிலோ வாசிக்க வேண்​டும் என்​கிற ஆர்​வம் நமக்கு ஏற்​படும். ஆனால், ஒரு பாடலில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள சுரங்​களின் கூட்​டிணைவு (Chord), தாளம் (Beat), இசையின் வேகம் (Tempo) ஆகிய​வற்றை அறிவது அவ்​வளவு எளிதல்ல. இந்​தச் சிக்​கலைத் தீர்க்க உதவும் செய்​யறி​வுச் செயலிதான் Chord ai.

ஆழ்​கற்​றல் (Deep Learning) தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தும் இந்​தச் செயலி​யின் உதவியுடன் யூடியூப், சவுண்ட் கிளவுட் கணினி ஆகிய​வற்​றில் இருக்​கும் ஒலி கோப்​பு​களை​யும் மைக்ரோ போன் மூலம் கேட்​கும் பாடல்​களை​யும் பகுப்​பாய்வு செய்ய முடியும்.

கார்​டுகளை​யும் தாளத்​தையும் கண்​டறிதல் (Chord, Beat & Key Recognition)

ஒரு பாடலில் பயன்​படுத்​தப்​படும் மேஜர் (Major), மைனர் (Minor) உள்​ளிட்ட பல்​வேறு இசை கார்​டுகளைக் கண்​டறிய இந்​தச் செயலி உதவு​கிறது. மேலும், பாடலின் வேகத்தை BPM (Beats Per Minute) அளவிலும் தாளங்​களைத் தாள அளவுப் பகுதி (Bar) அடிப்​படை​யிலும் அடை​யாளம் காண்​கிறது. இதன் மூலம் ஒரு பாடலின் இசைக் கட்​டமைப்​பைப் புரிந்​து​கொள்​வது எளிதாகிறது. கார்​டுகளின் அடிப்​படை​யில் பாடலின் முக்​கிய இசைச் சுர அமைப்​பையும் (Musical Key) இந்​தச் செயலி கணித்​துச் சொல்​கிறது.

நிகழ்​நேர இசை அடை​யாளம் (Real-Time Recognition)

ஒரு​வர் வாசிக்​கும் இசையையோ அரு​கில் ஒலிக்​கும் பாடலையோ மைக்ரோஃபோன் மூலம் கேட்டு, அதற்​கான கார்​டுகளை நிகழ்​நேரத்​திலேயே அடை​யாளம் காண முடி​கிறது. கிடார், பியானோ ஆகிய​வற்​றுக்​கான கார்டு வரைபடங்​கள் (Chord Diagrams) மூலம் இசைக்​கரு​வி​களை வாசிப்​பது எளிதாகிறது.

இசைக்​கரு​வி​களின் ஒலி களைப் பிரித்​தல் (Instrument Separation)

ஒரு பாடலில் இடம்​பெறும் பாடகரின் குரல், டிரம்ஸ், பாஸ் உள்​ளிட்ட பல்​வேறு இசைக்​கரு​வி​களின் ஒலிகளைத் தனித்​தனியாகப் பிரித்​தும் கேட்​கலாம். ஸ்​பாட்டிஃபையின் ‘பேசிக் பிட்ச்’ தொழில்​நுட்​பத்தை அடிப்​படை​யாகக் கொண்ட Midify வசதி மூலம் இசையை MIDI வடிவத்​திற்கு மாற்​றலாம். மேலும், இதிலுள்ள OpenAIஇன் Whisper தொழில்​நுட்​பம் மூலம் பாடல் வரி​களை எழுத்து வடி​வில் பெற முடியும். WAV கோப்​பு​களாக மாற்​றும் வசதி​யும் MIDI வடி​வில் மாற்​றும் வசதி​யும் தற்​போது iOS பதிப்​பில் உள்​ளன.

மேம்​பட்ட இசைப் பயிற்சி (Advanced Features)

செவென்த் (Seventh), டிமி​னிஷ்டு (Diminished), ஆக்​மென்​டட் (Augmented) போன்ற சிக்​கலான கார்​டுகளை​யும் கண்​டறிய​வும் இந்​தச் செயலி உதவு​கிறது. பாடலின் வேகத்​தைக் குறைத்​தல், சுருதியை மாற்​றுதல், குறிப்​பிட்ட பகுதியை மீண்​டும்ஒலிக்​கச் செய்​தல் போன்ற வசதி​களும் இதில் உள்​ளன.

பிற இசைக் கற்​றல் முறை களில் இருந்து எவ்​வாறு வேறு​படு​கிறது?

பாரம்​பரிய​மாக ஒரு பாடலின் கார்​டுகளைக் கண்​டறிய, இசைக் குறிப்​பு​களை வாசிக்​கவோ இசையைக் கேட்டு ஒவ்​வொரு கார்​டாக அடை​யாளம் காணவோ வேண்​டும். இதற்கு இசை குறித்த அறி​வும் தொடர்​பயிற்​சி​யும் தேவை. ஆனால் Chord ai, செய்​யறி​வின் உதவியுடன் பாடல்​களைப் பகுப்​பாய்வு செய்து, சாத்​தி​ய​மான கார்​டுகள், தாளங்​கள், இசை அமைவு​களை விரைவாக வழங்​கு​கிறது. இத​னால் தொடக்கநிலை​யில் இருக்​கும் இசை மாணவர்​கள் தங்​களுக்​குப் பிடித்​த​மான பாடல்​களை எளிதாகப் பயிற்சி செய்ய முடி​கிறது.

இருப்​பினும், செய்​யறிவு தரும் பகுப்​பாய்வு முடிவு​கள் நூறு சதவீதம் சரியானவை எனக் கருத முடி​யாது. குறிப்​பாகச் சிக்​கலான இசையமைப்​பு​களையோ தெளிவற்ற ஒலிப்​ப​திவு​களின் கார்​டுகளையோ அது தவறாக அடை​யாளம் காண வாய்ப்​புள்​ளது.

யாருக்​குப் பயன்​படும்?

இசை கற்​கும் மாணவர்​கள், ஆசி​ரியர்​கள், இசையமைப்​பாளர்​களுக்கு இச்​செயலி பயனுள்​ள​தாக இருக்​கும். இருப்​பினும், செய்​யறிவு தரும் கணிப்​பு​களில் பிழைகள் ஏற்​படக்​கூடும் என்​ப​தால் அவற்றை இசை நிபுணர்​களிடம் சரிபார்த்​துக்​கொள்​வது நல்​லது. இசை கற்​றலை​யும் பயிற்​சி​யையும் எளிமைப்​படுத்​தும் Chord ai, இசை ஆர்​வலர்​களுக்​குச் சிறந்த துணைவனாக விளங்​கு​கிறது. இணை​யத்​தளம்: https://chordai.net/

செய்​யறிவு விதி: ஒரு​வரின் குரல், புகைப்​படம் ஆகிய​வற்​றைப் போலியாக உரு​வாக்​கச் செய்​யறிவைப் பயன்​படுத்​தக் கூடாது. இது சட்​டப்​படியும் நெறி​முறைப்​படியும் தவறான செயல். எந்​தத் தொழில்​நுட்​பத்​தையும் நல்ல நோக்​கங்​களுக்கு மட்​டுமே பயன்​படுத்துங்கள்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT