தொழில்நுட்பம்

நாமே இணையத்தளத்தை வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 32

சரவணன் பார்த்தசாரதி

இன்​றைய டிஜிட்​டல் உல​கில் தனிநபர்​கள் முதல் சிறு தொழில் நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள் வரை அனைவருக்​கும் இணை​யத்​தளம் முக்​கிய​மான அடை​யாளமாக மாறியுள்​ளது.

ஆனால், இணை​யத்​தளங்​களை உரு​வாக்​கு​வதற்கு நிரலாக்க அறி​வும் (Coding), வடிவ​மைப்​புத் திறனும் அவ​சி​யம் என்​கிற எண்​ணம் பலரிடமும் உள்​ளது. இத்​தகைய சவால்​களை எளிதாகத் தீர்க்க உதவும் தளமாக Framer விளங்​கு​கிறது.

வடிவ​மைப்​புக்​கும் மாதிரி உரு​வாக்​கத்​துக்​கும் (Prototyping) தொடக்​கக் காலத்​தில் பயன்​படுத்​தப்​பட்​டுவந்த Framer, தற்​போது செய்​யறிவு முகவர்​கள் (AI Agents), உள்​ளடக்க மேலாண்மை (CMS), இணை​யத்​தள வெளியீடு (Hosting) உள்​ளிட்ட வசதி​களைக் கொண்ட ஒருங்​கிணைந்த தளமாகத் தன்னை வளர்ந்​துக்​கொண்​டு உள்ளது.

செயற்கை நுண்​ணறிவு மூலம் வடிவ​மைப்பு (AI Design Agent)

நமக்​குத் தேவை​யான இணை​யத்​தளத்தை எளிய ஆங்​கிலக் கட்​டளைகளில் (Prompts) விவரித்​தால், செய்​யறிவு அதன் பக்க அமைப்பு, பிரிவு​கள் (Sections), தலைப்​பு​கள், உள்​ளடக்​கங்​களை உரு​வாக்க உதவு​கிறது. எடுத்​துக்​காட்​டாக, ஒரு பள்​ளிக்​கான இணை​யத்​தளம் வேண்​டும் என்று குறிப்​பிட்​டால், முகப்​புப் பக்​கம், பாடத்​திட்ட விவரங்​கள், ஆசி​ரியர்​கள், அறி​விப்​பு​கள் போன்​றவற்​றுக்​கான பிரிவு​களை உரு​வாக்​கலாம். பின்​னர் அவற்​றைத் தேவைக்​கேற்ப மாற்​றியமைக்​கவும் செய்​ய​லாம்.

காட்​சிவழித் திருத்​தம் (Visual Canvas)

செய்​யறிவு உரு​வாக்​கிய வடிவ​மைப்​பு​களை நிரலா​ளர்​கள் நேரடி​யாகத் திருத்​தவும், எழுத்​துருக்​கள், நிறங்​கள், படங்​கள், அனிமேஷன், பக்க அமைப்​பு​கள் போன்​றவற்றை மாற்​றியமைக்​கவும் முடியும். மேலும், கணினி, டேப்​லெட், திறன்​பேசி ஆகிய​வற்​றின் திரை அளவு​களுக்கு ஏற்ப இணை​யத்​தளம் தன்​னைத்​தானே மாற்​றியமைத்​துக்​கொள்​ளு​மாறு செய்​ய​வும் முடியும்.

உள்​ளடக்க மேலாண்​மையும் நிரலாக்​கமும் (CMS & Code Agents)

CMS Agent மூலம் கட்​டுரைகள், செய்​தி​கள், அறி​விப்​பு​கள் உள்​ளிட்ட இணை​யத்​தள உள்​ளடக்​கங்​களை உரு​வாக்​கவும், ஒழுங்​கமைக்​கவும், புதுப்​பிக்​கவும் முடியும். Code Agent மூலம் ஊடாடும் கூறுகள் (Interactive Components), குறிப்​பிட்ட சில செயல்​பாடுகளுக்​கான நிரல்​களை உரு​வாக்​கலாம். இருப்​பினும், உரு​வாக்​கப்​பட்ட நிரல்​களின் செயல்​பாட்​டையும் பாது​காப்​புக் கூறுகளை​யும் நிரலா​ளர் சரிபார்க்க வேண்​டியது அவ​சி​யம்.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களு​டன் இணைப்பு (MCP Integration)

Model Context Protocol (MCP) என்​கிற தொழில்​நுட்​பத்​தின் மூலம் Claude, Cursor, Codex போன்ற இணக்​க​மான செய்​யறி​வுக் கரு​வி​களை Framer உடன் இணைக்​கலாம். இதன்​மூலம் இணை​யத்​தளப் பக்​கங்​களை உரு​வாக்​குதல், வடிவ​மைப்பை மாற்​றுதல், உள்​ளடக்​கங்​களைப் புதுப்​பித்​தல், CMS பதிவு​களை நிர்​வகித்​தல் போன்ற பணிகளை மேற்​கொள்​ளலாம்.

தேடு​பொறி மேம்​பாடும் பகுப்​பாய்​வும் (SEO & Analytics)

தேடு​பொறி மேம்​பாடு (SEO), செய்​யறிவு அடிப்​படை​யி​லான தேடல்​களுக்​கான உள்​ளடக்க மேம்​பாடு (AEO), பார்​வை​யாளர் பகுப்​பாய்வு (Analytics), பலமொழி ஆதரவு (Localization) போன்ற வசதி​களும் இதில் உள்​ளன. மேலும், இரண்டு வடிவ​மைப்​பு​களின் செயல்​திறனை ஒப்​பிடும் A/B சோதனையையும் மேற்​கொள்​ளலாம். இருப்​பினும், சில மேம்​பட்ட வசதி​களைப் பெற கூடுதல் கட்​ட​ணம் செலுத்த வேண்​டியதிருக்​கும்.

பிற கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

ஏற்​கெனவே நடைமுறை​யில் இருக்​கும் நிரலாக்க முறைகளு​டன் ஒப்​பிடும்​போது, Framerஇல் செய்​யறி​வின் உதவியுடன் வடிவ​மைத்​தல், காட்​சிவழித் திருத்​தம், உள்​ளடக்க மேலாண்மை, இணை​யத்​தள வெளியீடு ஆகிய​வற்றை எளிதாக ஒரே இடத்​தில் மேற்​கொள்ள முடி​கிறது. தொடக்​கநிலை நிரலாக்​கத்​திறன் கொண்​ட​வர்​கள்​கூட இணை​யத்​தளங்​களை உரு​வாக்​கு​வதும் இத​னால் சாத்​தி​ய​மாகிறது.

யாருக்​குப் பயன்​படும்?

UI/UX வடிவ​மைப்​பாளர்​கள், மாணவர்​கள், ஆசி​ரியர்​கள், தொழில்​முனைவோர், டிஜிட்​டல் சந்​தைப்​படுத்​தல் குழுக்​கள், சிறு நிறு​வனங்​களுக்கு இந்​தத் தளம் பயனுள்​ள​தாக இருக்​கும்.

செய்​யறி​வின் உதவியுடன் இணை​யத்​தளங்​களை விரைவாக வடிவ​மைத்து வெளி​யிட Framer உதவு​கிறது. இருப்​பினும், தர​மான உள்​ளடக்​கம், சிறந்த பயனர் அனுபவம், தகவல் துல்​லியம், தகவல் பாது​காப்பை உறுதிசெய்​வதில் மனிதர்​களின் பங்​கும் இன்​றியமையாதது என்​பதை நினைவில் கொள்ள வேண்​டும்.

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை: Create a modern, responsive personal portfolio website for a college student. Include Home, About Me, Education, Skills, Projects, Achievements, and Contact sections. Use a professional blue-and-white theme, attractive fonts, smooth animations, and simple navigation. Make it mobile-friendly, visually appealing, and easy to customize. Include sample content and project images.

இணையத்தளம்: https://www.framer.com/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT