தொழில்நுட்பம்

கற்றலை மேம்படுத்தும் ‘Edpuzzle’ | எளிதில் கற்கலாம் ஏஐ 27

சரவணன் பார்த்தசாரதி

வகுப்​பறைக் கற்​பித்​தலிலும் இணை​ய​வழிக் கல்​வி​யிலும் காணொளி​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன. ஆனால், மாணவர்​கள் காணொளி​களைப் பார்ப்​ப​தால் மட்​டுமே பாடத்தை முழு​மையாகப் புரிந்​து​கொண்​டார்​கள் என்று கூறி​விட முடி​யாது. காணொளி​களை வெறுமனே பார்ப்​பதை மாணவர்​களின் பங்​கேற்​புடன் கூடிய செயல்​பாட்​டுக் கற்​றலாக மாற்ற உதவும் தளமே Edpuzzle.

யூடியூப், கான் அகாடமி போன்​றவற்​றி​லுள்ள காணொளி​களி​லும் ஆசி​ரியர்​கள் சொந்​த​மாகப் பதிவேற்​றிய காணொளி​களி​லும் வினாக்​கள், குறிப்​பு​கள், விளக்​கங்​களை இணைத்து ஊடாடும் காணொளிப் பாடங்​களை (Interactive Video Lessons) உரு​வாக்​கலாம்.

செயற்கை நுண்​ணறிவு மூலம் வினா உரு​வாக்​கம் (Teacher Assist AI)

Edpuzzle தளத்​தின் ‘Teacher Assist’ என்​னும் செயற்கை நுண்​ணறிவு அம்​சம், காணொளி​யில் உள்ள தகவல்​களைப் பயன்​படுத்​தித் தானாகவே வினாக்​களை உரு​வாக்க உதவு​கிறது. பல்​தெரிவு வினாக்​களை​யும், விரிவான பதில்​களைக் கோரும் திறந்​தநிலை வினாக்​களை​யும் உரு​வாக்​கலாம்.

தானியங்கி மதிப்​பீடும் பின்​னூட்​டமும் (Autograding & Feedback)

மாணவர்​கள் காணொளியைப் பார்க்​கும்​போதே அதனுடன் இணைக்​கப்​பட்​டுள்ள வினாக்​களுக்​குப் பதிலளிக்​கலாம். பல்​தெரிவு வினாக்​கள் தானாக மதிப்​பிடப்​படு​கின்​றன. மேலும், செயற்கை நுண்​ணறிவு உதவியுடன் பதில்​களை மதிப்​பிடுவதற்​கான ‘Autograde’ வசதி​யும் உள்​ளது. இதன் மூலம் ஆசி​ரியர்​களின் மதிப்​பீட்​டுப் பணிச்​சுமையைக் குறைக்​கவும், மாணவர்​களின் கற்​றல் இடைவெளி​கயைக் கண்​டறிய​வும் முடியும்.

காணொளியைத் தாண்​டிச் செல்​வதைத் தடுத்​தல் (Prevent Skipping)

மாணவர்​கள் காணொளி​யின் முக்​கியப் பகுதி​களைப் பார்க்​காமல் முன்​னோக்​கித் தாண்​டிச் செல்​வதைத் தடுக்​கும் வசதி இதில் உள்​ளது. ஆசி​ரியர்​கள் ‘Prevent Skipping’ அம்​சத்​தைச் செயல்​படுத்​து​வதன் மூலம் காணொளியை முறை​யாகப் பார்ப்​பதை ஊக்​கு​விக்​கலாம். இடை​யிடையே கேட்​கப்​படும் வினாக்​கள் மாணவர்​களின் கவனத்​தைப் பாடத்​தின் மீது செலுத்​து​வதற்கு உதவு​கின்​றன.

குரல் விளக்​கங்​களும் குறிப்​பு​களும் (Voiceover & Audio Notes)

ஆசி​ரியர்​கள் நேரடி​யாகப் பதிவேற்​றிய காணொளி​களில் தங்​களின் சொந்​தக் குரலில் கூடுதல் விளக்​கங்​களைப் பதிவு செய்​ய​லாம். குறிப்​பிட்ட இடங்​களில் எழுத்​துக் குறிப்​பு​களை​யும் ஒலிக் குறிப்​பு​களை​யும் இணைக்​கலாம். இத​னால் மாணவர்​களின் கற்​றல் தேவை​களுக்கு ஏற்ப பாட உள்​ளடக்​கத்தை மாற்​றியமைக்க முடியும். இருப்​பினும், யூடியூப் காணொளி​களில் நேரடி​யாகக் குரல் விளக்​கத்​தைச் சேர்ப்​ப​தற்​குக் கட்​டுப்​பாடுகள் உள்​ளன.

மாணவர்​களின் கற்​றல் முன்​னேற்​றப் பகுப்​பாய்வு (Learning Analytics)

மாணவர்​கள் காணொளி​யில் எவ்​வளவு பகுதி​யைப் பார்த்​துள்​ளனர், வினாக்​களுக்கு எவ்​வாறு பதிலளித்​துள்​ளனர், பெற்ற மதிப்​பெண்​கள் என்ன, எந்த வினாக்​களில் அதி​கம் தவறிழைத்​துள்​ளனர் போன்ற தகவல்​களை ஆசி​ரியர்​கள் அறிந்​து​கொள்​ளலாம். இந்​தத் தகவல்​களின் அடிப்​படை​யில் கூடுதல் கவனம் தேவைப்​படும் மாணவர்​களைக் கண்​டறிந்து சிறப்​புக் கவனம் செலுத்​தலாம்.

கற்​றல் மேலாண்மை அமைப்​பு​களு​டன் ஒருங்​கிணைப்பு (LMS Integration)

Google Classroom, Moodle, Schoology, Blackboard போன்ற கற்​றல் மேலாண்மை அமைப்​பு​களு​டன் Edpuzzle தளத்தை இணைத்​துப் பயன்​படுத்​தலாம். இதன் மூலம் ஆசி​ரியர்​கள் காணொளிப் பாடங்​களை வழங்​கவும், மாணவர்​களின் செயல்​பாடுகளை ஒருங்​கிணைக்​கவும் முடியும்.

நேரலை வகுப்​பறை (Live Mode)

ஆசி​ரியர்​கள் வகுப்​பறை​யில் காணொளியைத் திரையிட்டு, அதிலுள்ள வினாக்​களுக்கு மாணவர்​கள் தங்​களின் கணினி அல்​லது திறன்​பேசி மூலம் நிகழ்​நேரத்​தில் பதிலளிக்​கச் செய்​ய​லாம். பதில்​களின் அடிப்​படை​யில் மாணவர்​களின் புரிதலை அறிந்து, தேவை​யான இடங்​களில் கூடுதல் விளக்​கங்​களை வழங்​கலாம்.

பிற தளங்​களி​லிருந்து எவ்​வாறு வேறு​படு​கிறது?

வழக்​க​மான காணொளிப் பகிர்​வுத் தளங்​களில் காணொளி​களைப் பார்ப்​ப​தும் பகிர்​வதும் முதன்​மையான செயல்​பாடுகளாக உள்​ளன. Edpuzzle தளத்​தில் காணொளி​யின் குறிப்​பிட்ட இடங்​களில் வினாக்​களை இணைத்​தல், மாணவர்​களின் பதில்​களை மதிப்​பிடுதல், கற்​றல் முன்​னேற்​றத்​தைக் கண்​காணித்​தல் ஆகியவை ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளன. இத​னால் காணொளிவழிக் கற்​றலைத் திட்​ட​மிட்ட கற்​பித்​தல் செயல்​பாடாக மாற்ற முடி​கிறது.

யாருக்​குப் பயன்​படும்?

பள்ளி, கல்​லூரி ஆசி​ரியர்​கள், இணை​ய​வழிப் பயிற்​சி​யாளர்​கள், பாடத்​திட்ட வடிவ​மைப்​பாளர்களுக்கு இந்​தத் தளம் பயனுள்​ள​தாக இருக்​கும். காணொளி​களைப் பார்ப்​ப​துடன் மாணவர்​கள் சிந்​திக்​கவும் பதிலளிக்​கவும் தங்​களின் புரிதலை மதிப்​பிட​வும் வாய்ப்​பளிப்​பதே Edpuzzle தளத்​தின் சிறப்​பம்​சம்.

https://edpuzzle.com/

செய்யறிவு விதி: உங்​கள் பள்ளி, கல்​லூரி செய்​யறி​வுப் பயன்​பாடு குறித்து என்ன விதி​முறைகளைக் கொண்​டுள்​ளது என்​பதை அறிந்​து​ கொள்​ளுங்​கள். விதி​களுக்கு உட்​பட்டு, செய்​யறிவைப் பயன்​படுத்தி கற்​பித்​தலை​யும் கற்​ற லை​யும் மேம்​படுத்​துங்​கள். விதி​களைப் பின்​பற்​றினால் பெரும்​பாலான சிக்​கல்​களைத் தவிர்​த்துவிட முடியும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT