தொழில்நுட்பம்

எதைக் கேட்டாலும் பதில் உண்டு! | எளிதில் கற்கலாம் ஏஐ 16

சரவணன் பார்த்தசாரதி

இன்று வாட்​ஸ்அப், இன்ஸ்டா கிராம், ஃபேஸ்​புக், மெசஞ்சர் உள்​ளிட்ட செயலிகளைப் பயன்​படுத்​தாதவர்​களே இருக்க முடி​யாது. பயனர்​களின் கேள்​வி​களுக்கு உடனுக்​குடன் பதிலளிக்​கும், படைப்​பாற்​றல் சார்ந்த பணிகளை முடித்​துத் தரும் அதிநவீன செயற்கை நுண்​ணறிவு உதவியாளரே Meta AI.

செயலிகளுக்கு உள்​ளேயே செய்​யறிவு உரையாடல் (In-App Integration) மெட்டா நிறு​வனத்​தின் திறந்த வள (Open Source) பெரு​மொழி மாதி​ரியான, ‘லாமா’ (Llama - Large Language Model Meta AI) தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தக் கருவி இயங்​கு​கிறது.

Meta AI-ஐ பயன்​படுத்த தனியாக வேறு எந்​தச்செயலியையும் பதி​விறக்​கம் செய்ய வேண்​டிய அவ​சி​ய மில்லை. வாட்​ஸ்அப் தேடல் பெட்​டி​யிலோ, இன்ஸ்டாகிராம் மெசேஜ்களிலோ எளிய முறை​யில் தட்​டச்சு செய்து கேள்​வி​களைக் கேட்​கலாம். மேலும், நண்​பர்​களின் குழு உரையாடல்​களில் (Group Chats) @Meta AI எனக் குறிப்​பிட்டு, சுற்​றுலாத் திட்​டங்​கள், உணவகப் பரிந்​துரைகள், கல்வி சார்ந்த சந்​தேகங்​களை உறுப்​பினர்​கள் அனைவரும் ஒன்​றிணைந்து ஆலோ​சிக்க முடியும்.

உடனடி புகைப்​பட உரு​வாக்​கம் (Real-time Image Generation)

நாம் கொடுக்​கும் கட்​டளை களுக்கு (Text Prompts) ஏற்ப மிகத் துல்​லிய​மான உயர்​தரப் புகைப்​படங்​களை நொடிகளில் உரு​வாக்​கித் தரும் ‘Imagine’ தொழில்​நுட்​பம் இதில் உள்​ளது. பயனர்​கள் தட்​டச்சு செய்​யும்​போதே, ஒவ்​வொரு சொல்​லுக்​கும் ஏற்​பப் புகைப்​படங்​கள் நேரலை​யில் மாறிக்​கொண்டே இருக்​கும் ‘Imagine Flash’ வசதி​யைக் கொண்​டுள்ள இக்​கரு​வி​யில், புகைப்​படங்​களை GIF படங்​களாக மாற்​றியமைக்​கும் வசதி​யும் உள்​ளது.

தேடு​பொறி இணைப்பு (Real-time Search Integration)

கூகுள் (Google), பிங் (Bing) போன்ற முன்​னணி தேடு​பொறிகளு​டன் நேரடி​யாக இணைக்​கப்​பட்​டுள்​ள​தால், உலக அளவில் நடக்​கும் நேரலைச் செய்​தி​கள், விளை​யாட்டு முடிவு​கள், சந்தை நில​வரங்​கள், பயண விவரங்​களை உடனுக்​குடன் பெறமுடி​கிறது.

படைப்​பாளர்​களுக்​கான உள்​ளடக்க உதவி (Content Creation & Captions)

இன்ஸ்டாகிராம் ரீல்​ஸ்​கள் (Reels), ஃபேஸ்​புக் பதிவு​களுக்​குத் தேவை​யான சுவாரசி​ய​மான தலைப்​பு​கள் (Captions), ஹேஷ்டேகு​கள் (Hashtags), கதைக்​களங்​களை (Script Ideas) நொடிகளில் உரு​வாக்​கித்தரு​வது இதன் கூடுதல் சிறப்​பம்​ச​மாகும்.

திறன் கண்​ணாடிகளும் குரல்​வழிச் சேவையும் (Meta Glasses Integration)

திறன்​பேசிகளில் மட்​டுமன்றி, Ray-Ban Meta திறன் கண்​ணாடிகளி​லும் (Smart Glasses) இத்​தொழில்​நுட்​பம் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் பயனர்​கள் தங்​கள் குரல் மூலமாகவே கட்​டளைகளை வழங்கி, சுற்​றியுள்ள இடங்​களைப் பற்​றிய விவரங்​களைக் கேட்​டறிய முடியும்.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களிள் ஈருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

ஏனைய கரு​வி​களைப் பயன்​படுத்த அவற்​றுக்​கென அமைக்​கப்​பட்​டுள்ள தளங்​களுக்கோ செயலிகளுக்கோ சென்று கணக்​குத் தொடங்​கிப் பயன்​படுத்தவேண்​டும். மாறாக, மக்​கள் அன்​றாடம் பயன்​படுத்​தும் சமூக வலைத்​தளங்​களின் உள்​ளேயே Meta AI இல​வச​மாக இணைக்​கப்​பட்​டிருப்​ப​தால், நேரத்​தைச் சேமித்து மிக எளிதாகப் பயன்​படுத்த முடி​கிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

மாணவர்​கள், சமூக ஊடகப் படைப்​பாளி​கள் (Content Crea tors), விற்​பனைப் பிரதி​நி​தி​கள், சந்​தைப்​படுத்​துநர்​கள், வணிகர்​கள், தகவல்​களை விரைவாகப் பெற விரும்​பும் பொது​மக்​கள். சமூக ஊடக அனுபவத்தை மேலும் எளிமையாக்கி, செய்​யறிவை மக்​களின் அன்​றாடத் தகவல்​தொடர்​பின் ஒரு பகுதி​யாக மாற்​று​வதில் Meta AI முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

https://app.diffit.me/

செய்யறிவு விதி: உங்​கள் வங்கி விவரங்​கள், மருத்​து​வத் தகவல்​கள் போன்​றவற்​றைச் செய்​யறி​வுக் கரு​வி​களிடம் பகிர்​வதைத் தவிருங்​கள். இணை​யத்​தில் உங்​கள் தனிப்​பட்ட தகவல்​களைப் பாது​காப்​பது மிகவும் முக்​கியம். விழிப்​புடன் இருப்​பது ஆபத்​து களைத் தவிர்க்​கும்.

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை

Give me 3 creative script ideas for a 30-second YouTube Short about ‘Time Management Tips for College Students.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT