தொழில்நுட்பம்

கட்டுரையைப் படமாக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 11

சரவணன் பார்த்தசாரதி

சிக்​கலான கருத்​துகள், தொழில்​முறை அறிக்​கைகள், கல்​விப்​புலம் சார்ந்த கட்​டுரைகளைப் படித்​துப் புரிந்​து​கொள்​வதை​விட, அவற்றை வரைபடங்​களாகவோ (Diagrams), விளக்​கப்​படங்​களாகவோ (Infographics) பார்க்​கும்​போது மனித மூளை மிக எளி​தாக​வும் வேக​மாக​வும் புரிந்​து​

கொள்​கிறது. ஆனால், அத்​தகைய படங்​களை உரு​வாக்​கு​வதற்கு வடிவ​மைப்​புத் திறனும் (Design Skills) நேர​மும் நமக்​குத் தேவைப்​படும். இந்​தச் சவாலுக்கு புது​மை​யானதொரு தீர்வை வழங்​கு​கிறது Napkin AI என்​னும் அதிநவீன செய்​யறி​வுக் கரு​வி.

வழக்​க​மான வடிவ​மைப்பு மென்​பொருட்களைப்​போல வெற்​றுப் பக்​கத்​தில் (Blank Canvas) தொடங்​கு​வதற்​குப் பதிலாக, இது நாம் எழுதும் உரையை (Text) ஆழமாகப் பகுப்​பாய்வு செய்​து, அதற்​கேற்ற வரைபடங்​களை உரு​வாக்​கித் தரு​கிறது.

உரைநடை​யில் இருந்து வரைபடம் (Text-to-Visual Generation) Napkin AI தளத்​தில் நமது கட்​டுரைகளையோ பத்​தி​களையோ பதி​விட்​டால் போதும்; குறிப்​பிட்ட வாக்​கி​யங்​களைத் தேர்ந்​தெடுத்து ‘Generate Visual’ பொத்​தானை அழுத்​தி​னால், அந்த உரை​யின் மையக்​கருத்​தைப் புரிந்​து​கொண்​டு, அதற்​குப் பொருத்​த​மான செயல்​வழிப் படங்​களை​யும் (Flowchart), மன வரைபடங்​களை​யும் (Mind Maps), தரவு​சார் படங்​களை​யும் (Data Charts) இது உடனுக்​குடன் உரு​வாக்​கித் தரு​கிறது.

முழு​மை​யான தனிப்​பய​னாக்​கம் (Full Customization) உரு​வாக்​கப்​படும் வரைபடங்​களில் இருக்​கும் வண்​ணங்​கள், எழுத்​துருக்​கள் (Fonts), வடிவங்​கள், வடிவுருக்​களை (Icons) நம் விருப்​பத்​துக்​கேற்ப எளி​தாக மாற்​றியமைக்​க​வும் இக்​கரு​வி​யில் வழி​யுள்​ளது.

நிறு​வனங்​களின் அடை​யாள வண்​ணங்​களை (Brand Colors) இதில் ஏற்​றி, அதற்​கேற்ற வகை​யில் ஒரே சீரான வகை​யில் படங்​களை வடிவ​மைக்​க​வும் முடி​யும். ஒரே படத்​தைப் பல்​வேறு விதங்​களில் இக்​கருவி உரு​வாக்கி அளிப்​ப​தால், அவற்​றி​லிருந்து ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்​தெடுக்​க​வும் வாய்ப்பு உண்​டு.

‘Sketch’ வசதி​யும் பல வடிவப் பதி​விறக்​க​மும் (Multi-Format Export) இதில் உள்ள ‘Sketch’ வசதி​யைக் கொண்டு படங்​களின்​மேல் வரைய​வும் மாற்​றங்​களைச் செய்​ய​வும் முடி​யும். உரு​வாக்​கப்​பட்ட வரைபடங்​களை PNG, PDF, SVG, PPT போன்ற பல்​வேறு வடிவங்​களில் பதி​விறக்​கம் (Download) செய்​யும் வசதி​யும் இதில் உள்​ளது.

நிகழ்​நேர இணை​வாக்​கம் (Real-time Collaboration) குழு​வாக வேலை செய்​வோர் ஓர் ஆவணம் குறித்த தங்​கள் கருத்​துகளைப் பகிர்ந்​து​கொள்​ள​வும் (Comments), ஒன்​றாகச் சேர்ந்து அதைச் செப்​பனிட​வும் முடி​யும். இதன் வழியே, நிறு​வனங்​களின் திட்​டப்​பணி​களில் இடம்​பெற்​றுள்ள உறுப்​பினர்​கள் விரைந்து செயல்​பட​வும் முடிவு​களை எடுக்​க​வும் முடிகிறது.

பிற செய்​யறி​வுக் கருவி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

Canva, Adobe Express போன்​றவற்​றில் ஒவ்​வொரு வடிவத்​தை​யும் இழுத்து ஒட்ட வேண்​டும் என்​ப​தால் பணியை முடிக்க அதிக நேர​மாகும். Gamma AI கருவி முழு விளக்​கக்காட்​சிகளை​யும் இணையப் பக்​கங்​களை​யும் உரு​வாக்​கக் கூடியது. Napkin AI கரு​வியோ, குறிப்​பிட்ட பத்​தி​களில் உள்ள கருத்​துகளை மட்​டும் விளக்​கப்​படங்​களாக (Exploratory Visuals) மாற்​றித் தரு​வ​தில் சிறப்​புறச் செயல்​படு​கிறது.

யாருக்கு இது மிக​வும் பயன்​படும்?

திட்ட மேலா​ளர்​கள் (Project Managers), எழுத்​தாளர்​கள், சந்​தைப்​படுத்​துபவர்​கள் (Marketers), பேராசிரியர்​கள், மாணவர்​கள், ஆராய்ச்சி அறிக்​கைகளைத் தயாரிப்​போர் நீண்ட பத்​தி​களைக் காட்சி வடிவி​லான வரைபடங்​களாக உரு​வாக்​கி, கருத்​துப் பரி​மாற்​றத்தை ஈர்க்​கும் வகை​யில் மாற்​று​வ​தில் Napkin AI முக்​கியப் பங்​காற்​றுகிறது.

https://app.napkin.ai/

செய்யறிவு விதி

செய்​யறி​வுக் கருவி​களிடம் இருந்து சிறந்த பதிலைப் பெற வேண்​டுமெனில், கட்​டளை எழுதும் முறையைக் (Prompting) கற்​றுக்​கொள்​ளுங்​கள். சரி​யான முறை​யில் கட்​டளை​களைத் தரு​வது தனித்​ததொரு திறமை​யாகும். பயிற்சி செய்​யச் செய்ய உங்​கள் கட்​டளை​கள் மிக​வும் நேர்த்​தி​யாக மாறும். நேர்த்​தி​யான கட்​டளை செம்​மை​யான பதில்​களைப் பெற்​றுத் தரும்.

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை:

Create a vibrant, professional flowchart titled “Student Success Journey”. Start → Set Goals →Plan Learning → Study → Practice → Take Assessment → Evaluate Performance.

Decision: Score → 80%?

Yes: Celebrate Success → Achieve Goal → End.

No: Analyze Mistakes → Improve Weak Areas → Practice Again → Retake Assessment

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT