தொழில்நுட்பம்

Itel Zeno 100 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் செனோ 100 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் செனோ 100 புரோ போனை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனும் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் ‘அல்ட்ராலிங்க்’ அம்சம் சாட்டிலைட் கனெக்டிவிட்டி மூலம் பயனர்கள் மெசேஜ்களை அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் உற்பத்தி செலவு காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் பட்ஜெட் விலையில் இந்த போனை ஐடெல் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுடன் ஐடெல் செனோ 100 லைட் போனும் அறிமுகமாகி உள்ளது.

ஐடெல் செனோ 100 புரோ: சிறப்பு அம்சங்கள்

>> 6.6 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>> Unisoc T7100 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் இயங்குதளம்

>> 3ஜிபி ரேம்

>> 64ஜிபி ஸ்டோரேஜ்

>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

>> 5,000mAh பேட்டரி

>> 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> 4ஜி நெட்வொர்க்

>> கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.8,599 என அறிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT