தொழில்நுட்பம்

iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஆரிஜின் ஓஎஸ் தளத்தில் இந்த போன் இயங்குகிறது.

சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

ஒன்பிளஸ் 15 மற்றும் ரியால்மி ஜிடி 8 புரோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 சிப்செட்டில் இயங்கும் மூன்றாவது போனாக iQOO 15 சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ஆல்பா மற்றும் லெஜெண்ட் எடிஷனில் இந்த போன் வெளிவந்துள்ளது.

iQOO 15 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.85 இன்ச் எல்டிபிஓ AMOLED டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • குவால்காம் எஸ்எம்8850-ஏசி ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 சிப்செட்

  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 12 / 16ஜிபி ரேம்

  • 256 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 7,000 mAh பேட்டரி

  • 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் திறன்

  • இந்த போனின் விலை ரூ.72,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT