விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் 
தொழில்நுட்பம்

விவோ X90 மற்றும் X90 புரோ ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனம், விவோ எக்ஸ்90 (X90) ஸ்மார்ட்போன் வரிசையில் (சீரிஸ்) இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது. X90 மற்றும் X90 புரோ என இந்த இரண்டு மாடல் போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். X90 புரோ+ மாடல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் X90 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

X90 சீரிஸ் சிறப்பு அம்சங்கள்

  • இரண்டு போன்களும் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம் பெற்றுள்ளது
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • ஆக்டா-கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 9200 ப்ராசஸர்
  • 4,810mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது X90 போன்
  • 4,810mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது X90 புரோ போன்
  • 120 வாட்ஸ் ப்ளாஷ் சார்ஜ் சப்போர்ட்
  • 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது X90 புரோ
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களை கொண்டுள்ளது X90 போன்
  • 2ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டுள்ளது X90 புரோ
  • 50எம்பி +12எம்பி அல்ட்ரா ஒய்டு + 12எம்பி டெலி போட்டோ கேமரா என மூன்று கேமராவை கொண்டுள்ளது X90
  • 50.3எம்பி +12எம்பி அல்ட்ரா ஒய்டு + 50எம்பி டெலி போட்டோ கேமரா என மூன்று கேமராவை கொண்டுள்ளது X90 புரோ
  • இரண்டு போனிலும் 32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா உள்ளது
  • 8ஜிபி ரேம் கொண்ட X90 போனின் விலை ரூ.59,999. 12ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.63,999
  • அதுவே X90 புரோ போனின் விலை ரூ.84,999
  • வரும் மே 5-ம் தேதி முதல் இந்த போன்கள் விற்பனைக்கு கிடைக்கும். முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட வங்கிகளின் பயனர்களுக்கு விலையில் அறிமுகம் சலுகையும் உள்ளது.
SCROLL FOR NEXT