சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வரும் 30-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை துவங்க உள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன்.
- 6.6 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது இந்த போன்
- ஃபுள் ஹெச்டி+ டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- சாம்சங்கின் Exynos 1330 ப்ராசஸர்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா உள்ளது
- 6000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- டைபி-சி யூஎஸ்பி போர்ட்
- இந்த போனில் சார்ஜர் இடம்பெறவில்லை. அதனால் பயனர்கள் அதனை தனியாக வாங்க வேண்டி உள்ளது
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை முறையே ரூ.14,490 மற்றும் ரூ.15,990 என அறிவிக்கப்பட்டுள்ளது
- அறிமுக சலுகையாக ரூ.1,500 வரையில் ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கும் என தெரிகிறது