தொழில்நுட்பம்

தளம் புதிது: லண்டன் திரைப்பட வரைபடம்

சைபர் சிம்மன்

ங்கில படங்கள் பலவும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரில் படமாக்கப்பட்ட படங்கள் பற்றி அறிய உங்களுக்கு விருப்பமா? இதற்கு ‘கோ2சினிமா’ தளத்தின் திரைப்பட படப்பிடிப்பு பகுதி உதவுகிறது.

இந்தப் பகுதியில் லண்டன் நகர், சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்ட படங்கள் தொடர்பான விவரங்களைப் பார்க்கலாம். லண்டன் வரைபடம் மீது இந்தத் தகவல்கள் அழகாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரைப்படத்தில் மஞ்சள், சிவப்பு நிற ஐகான்கள் மீது கிளிக் செய்தால் படப்பிடிப்பு தொடர்பான விவரங்கள் தோன்றுகின்றன.

திரைப்பட ரசிகர்களுக்கு இந்த தளம் நிச்சயம் சுவாரஸியமானதாக இருக்கும். லண்டன் நகர் மீது அபிமானமும் இருந்தால், இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கும். மற்ற நகரங்களுக்குக் இதுபோன்ற ஒரு வரைபடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தையும் இது ஏற்படுத்தலாம்.

இணைய முகவரி: https://go2cinema.com/filming-location-map

SCROLL FOR NEXT