டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன் 
தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ (2023) என்ற ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் ஹெச்.டி+ எல்சிடி ஸ்கிரீன்
  • மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்
  • 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
  • 5 மெகாபிக்சலை கொண்டுள்ளது முன்பக்க கேமரா.
  • 5,000mAh திறன் கொண்ட பேட்டரி
  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • டைப்-சி யூஎஸ்பி போர்ட்
  • பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர்
  • இந்த போனின் விலை ரூ.6,999
SCROLL FOR NEXT