ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 
தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, அம்சங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது ரியல்மி 10 4ஜி போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்து உள்ளது அந்நிறுவனம்.

இந்த போன் பார்க்க அசப்பில் அப்படியே ரியல்மி 10 புரோ ஸ்மார்ட்போனை போலவே உள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் என இரு வேறு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது
  • இந்த போன் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக வெளிவந்துள்ளது
  • 4ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.12,999
  • 8ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.16,999
SCROLL FOR NEXT