தொழில்நுட்பம்

ஆப்பிள் ரெட் ஐபோன் அடுத்த ஆண்டில் அறிமுகம்?

ஐஏஎன்எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். ஒவ்வொரு வருடமும் முந்தைய ஐபோனின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, அடுத்த வெளியீடு வருவது வழக்கம்.

அந்தவகையில், 2017-ம் ஆண்டுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மாடல், சிவப்பு வண்ணத்திலும் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றின் வடிவமைப்பிலும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.

ஆப்பிள் இன்சைடர் வலைதளம் ஐபோன் 8 மாடலின் வடிவமைப்பு குறித்துக் கூறியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்:

* ஐபோனின் வழக்கமான 4.7 மற்றும் 5.5 அங்குல அளவோடு, ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது வகையையும் அறிமுகப்படுத்த உள்ளது.

* ஐபோன் 8 மாடல், 5.1 அல்லது 5.2 அங்குல ஓஎல்ஈடி திரையோடு இருக்கும்.

* கண்ணுக்குத் தெரியாத முகப்புப் பொத்தானும், வளைந்த திரையும், இரட்டை லென்ஸ் கேமரா வசதியும் இருக்கும்.

* வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி இருக்க வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றைப் போலவே ஐபோன் 8 மாதிரியிலும் அதே அலுமினியம் வடிவமைப்பு இருக்கும்.

* அதே போல அதிவேக ஏ11 சிப் மற்றும் ஓஎல்ஈடி திரை இதில் அமைக்கப்பட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள், ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான ஓஎல்ஈடி வழங்குநர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT