நாய்ஸ் ColorFit Pro 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச் 
தொழில்நுட்பம்

இந்தியாவில் நாய்ஸ் ColorFit Pro 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலை, அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் நாய்ஸ் நிறுவனத்தின் ColorFit Pro 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி உள்ளது. இந்த வாட்ச் விலை என்ன? இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் பார்ப்போம்.

நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், ColorFit Pro 4 Alpha என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி முதல் இந்த வாட்ச் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 வண்ணங்களில் இந்த வாட்ச் வெளியாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
  • டிஸ்ப்ளே வேக் மற்றும் ஆஃப் செய்ய ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் அம்சம்
  • 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப்
  • இன்ஸ்டா சார்ஜ் அம்சம்
  • டிவைஸ் பேரிங் செய்ய சிங்கிள் சிப் ப்ளூடூத் 5.3
  • 150 வாட்ச் ஃபேசஸ்
  • இதயத்துடிப்பு, ஆக்டிவிட்டி ஸ்டேட்டஸ், SpO2, ஸ்லீப் மானிட்டர், ஸ்ட்ரெஸ் மெஷர்மெண்ட், மூச்சுப்பயிற்சி போன்ற உடல் நலன் சார்ந்த அம்சங்களும் இந்த வாட்ச் கொண்டுள்ளது
  • இதன் விலை ரூ.3,799 என தெரிவிக்கப்பட்டுள்ளது
SCROLL FOR NEXT