தொழில்நுட்பம்

பொருள் புதுசு: உடற்பயிற்சி கருவி

செய்திப்பிரிவு

இந்தக் கருவியை வாங்கும் பொழுது ஒரு கேம் அப்ளிகேஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி கருவியின் நடுவே ஸ்மார்ட் போனை வைத்து விளையாடும் போது அதற்கேற்றவாறு உடலும் அசைகிறது.

ஜேம்ஸ்பாண்ட் வாகனம்

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அதிவேக ஸ்மார்ட் படகை பார்த்திருப்போம். இதை உண்மையாக்கும் விதமாக அதேபோன்ற படகை வடிவமைத்துள்ளனர். பல்வேறு நவீன வசதிகள் இதில் உள்ளன. குறிப்பாக மின்சாரத்தில் இந்த படகு இயங்குகிறது. ஒரு தரம் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடிகிறது. இந்த படகின் விலை 28,144 டாலர். அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும். இரண்டு பேர் மட்டுமே பயணிக்க கூடிய இந்த படகின் எடை 100 கிலோ.

செவ்வாயில் ஐஸ் வீடு

செவ்வாய் கிரகத்தில் அதிக விண்வெளி கதிர்வீச்சுகள் இருப்பதால் நீண்ட நேரம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாது. அதைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் வீடு. மேலும் பூமியிலிருந்து அனுப்பும் பொருட்களை சேமித்து வைக்கவும் அதை செவ்வாயில் சோதனை செய்து பார்க்கவும் இந்த வீடு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு விண்வெளி வீரர்கள் தங்க முடியும். உறங்குவதற்கு, வேலை செய்வதற்கு என தனித்தனி கேபின்கள் உள்ளன. இந்த வீட்டின் மேல் கதிர்வீச்சை தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியான பூச்சு உள்ளது.

ஸ்மார்ட் கண்ணாடி

இந்த ஸ்மார்ட் கண்ணாடி வழியாக முகத்தைப் பார்க்கும் பொழுது முகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தருகிறது. இந்த கண்ணாடிக்கும் மேலே கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது படம் எடுத்து தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறது.

விர்ச்சூவல் கீ போர்டு

உலகின் அதிநவீன எதிரொளிப்பு கீ போர்டை வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவியின் மேல் ஸ்மார்ட்போனை வைத்து கீ போர்டு செயலியை செயல்படுத்தும் போது அதில் உள்ளவாறு அப்படியே நாம் திரையில் காணமுடிகிறது.

SCROLL FOR NEXT