2016-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் பற்றிய தேடுதல் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும், ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரேவும் இடப்பெற்றுள்ளனர்.
2017ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் பற்றிய தேடுதல் பட்டியலில், பிரியங்கா சோப்ராவுக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை ஜெனிபர் கர்னர், ஜெனிபர் லாரன்ஸ் பெற்றுள்ளனர்.
அடுத்ததாக அதிகம் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே ஏழாம் இடம் பிடித்துள்ளார். இதில் முதலாவது இடம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் ராய்க்கு கிடைத்துள்ளது.
போகிமான் கோ விளையாட்டும் பொழுதுபோக்கு தளங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் உள்ளது.
2016ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தனிநபர் பட்டியலில் முதலிடத்தில் டொனால்டு ட்ரம்ப்பும், இரண்டாவது இடத்தில் ஹிலாரி கிளிண்டனும் உள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட நிகழ்வில் மறைந்த பழம்பெரும் பாடகர் பிரின்ஸ் உள்ளார். அதிகமாக தேடப்பட்ட பாடல் வரிசையில் அவருடைய பாடலான பர்பிள் ரைன் இடப்பெற்றுள்ளது.
நடிகை ஏஞ்சலினா ஜோலியுடானான விவகாரத்து காரணமாக அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் பட்டியலில் பிராட் பிட் உள்ளார்.