தொழில்நுட்பம்

செயலி புதிது: உள்ளங்கையில் கலைக்கூடங்கள்

சைபர் சிம்மன்

கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் தொடர்பான தகவல்களைக் கலை ஆர்வலர்களுக்கு அளிக்கும் வகையில் ‘ஆர்ட்பஸ்’ செயலி அறிமுகமாகியுள்ளது.

கலைக்கூடங்களுக்கான வழிகாட்டி என்று சொல்லக்கூடிய இந்தச் செயலி, நகரத்தில் உள்ள கலைக்கூடங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கண்காட்சிகள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதன் மூலம் கலை ஆர்வலர்கள் புதிய கண்காட்சிகள் பற்றி அறிந்துகொள்ளலாம். கண்காட்சி தொடர்பான தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

கலை ஆர்வலர்கள் மற்றும் கலைக்கூடங்களை இணைக்கும் மேடைபோலச் செயல்படக்கூடிய இந்தச் செயலி முதல் கட்டமாக தில்லி மற்றும் மும்பை நகரங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆன்ட்ராய்டு, ஐபோனில் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=com.artbuzz&hl=en

SCROLL FOR NEXT