வாட்ஸ் அப் முடங்கியது 
தொழில்நுட்பம்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப் சேவை: ட்விட்டரை முற்றுகையிடும் பயனர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முடங்கியது. இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் உண்மையில் அந்த தளம் முடங்கி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள ட்விட்டர் தளத்தை விசிட் செய்த வண்ணம் உள்ளனர். சிலர் தெறிக்கும் வகையில் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் சேவையை ஒரு பயனர் பெற மொபைல் எண்ணும், இணைய இணைப்பும் மட்டுமே போதுமானது. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்களை மிகவும் சிக்கனமான செலவில் பயனர்களால் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் வழியாக தொடர்பு கொள்ள முடியும். இத்தகைய சூழலில்தான் வாட்ஸ்அப் தளம் தற்போது முடங்கி உள்ளது. பயனர்கள் அது குறித்து மிகவும் வேடிக்கையான வகையில் ட்வீட் செய்து வருகின்றனர்.

  • ‘வாட்ஸ்அப் முடக்கம். டெலிகிராம் நிறுவனம் ஹேப்பி’
  • ‘இது தெரியாமா ஏன் போன நான் நிறைய முறை ரீஸ்டார்ட் செய்து விட்டேனே’
  • ‘எனக்கு தெரியும். வாட்ஸ்அப் டவுனா இருக்குதான்னு தெரிஞ்சிக்க நீங்க இங்க வந்து இருக்கீங்கன்னு’
  • ‘எல்லாரும் இப்படி தானா? வாட்ஸ்அப் முடங்கினா ட்விட்டர் வந்துதான் தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு’
  • ‘தீபாவளி விடுமுறை போல இன்னைக்கு அவங்களுக்கு லீவ் போல’

- இப்படி பயனர்கள் மீம் போட்டு வருகின்றனர். இதுவரையில் வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா தரப்பில் விரைவில் வாட்ஸ் அப் கோளாறு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது. பெரும்பாலான பயனர்களால் வாட்ஸ்அப் சேவையை முற்றிலுமாக பயன்படுத்த முடியவில்லை. இது மொபைல் மற்றும் வாட்ஸ் வெப் என அனைத்துக்கும் பொருந்தும். விரைவில் இந்த தொழில்நுட்ப சிக்கலை வாட்ஸ்அப் தளம் சீர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT