தொழில்நுட்பம்

பொருள் புதுசு: ஸ்விட்ச் ரோபோ

செய்திப்பிரிவு

மின்னணு சாதனங்கள், மோட்டார் சாதனங்களின் ஸ்விட்சை ஆன்/ ஆப் செய்யும் கருவி. ஸ்விட்சை இயக்க எழுந்து செல்லத் தேவையில்லை. இந்த கருவியை ஸ்விட்ச் பக்கத்தில் பொருத்தி விட்டு ஸ்மார்ட் போன் மூலம் இயக்கலாம்.

காபி குடுவை

தண்ணீர் குடுவை போல இருக்கும் இந்த சிறிய குடுவையில் சுடுநீரை பிடித்து அதற்குள் இன்ஸ்டண்ட் காபி பேக்/ டீ பேக்கை வைத்து மூடிவிடவேண்டும். சில நிமிடங்களில் குடுவையிலிருந்தே காபியை குடிக்கலாம்.

ஒளிரும் ஹெல்மெட்

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு என்றே வடிவமைக்கப்பட்ட ஒளிரும் ஹெல்மெட். இதற்கான எல்இடி ஒயரை பல வடிவங்களுக்கும் மாற்றிக் கொள்ளலாம். யுஎஸ்பி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT