நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன்.
டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா, தற்போது ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டி10 LTE டேப்லெட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன் மூன்று நாட்கள் வரையில் சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி10 டேப்லெட் இந்தியாவில் அண்மையில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் LTE வேரியண்ட் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜி11 பிளஸ்: சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் திரை அளவு
- ஹெச்.டி+ டிஸ்பிளே
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி பெற்றுள்ளது
- இதன் விலை ரூ.12,499
டி10 டேப்லெட்: சிறப்பு அம்சங்கள்
- 8 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே
- யூனிசாக் T606 சிப்செட்
- 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- பயோமெட்ரிக் ஃபேஸ் அன்லாக்
- 5250mAh திறன் கொண்ட பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- LTE சப்போர்ட்
- 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த டேப்லெட் கிடைக்கிறது.
- இதன் விலை ரூ.12,799 மற்றும் ரூ.13,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.