ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடா நிறுவனம் `ஸ்மார்ட் கீ பாக்ஸ்’ என்ற புதிய செயலியை வடிவமைத்துள்ளது. இந்தச் செயலி மூலமாக காரை ஸ்டார்ட் செய்ய முடியும். மேலும் இந்த செயலி மூலமாக காரின் கதவுகளை திறந்து, மூட முடியும். சமீபத்தில் இதற்கான முன்னோட்டம் சான் பிரான்ஸிஸ்கோ நகரத்தில் நடத்தப்பட்டது. விரைவில் இந்தச் செயலியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கான வேலையில் டொயோடா நிறுவனம் இறங்கியுள்ளது.
ஸ்மார்ட் புரொஜெக்டர்
எக்ஸ்ஜிமி நிறுவனம் ஹெச்1 என்ற புதிய வகை ஸ்மார்ட் புரொஜெக்டரை வடிவமைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் வசதி, 900 லூயிமினஸ் அளவில் வெளிச்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி திரைகளிலும் இதை பயன்படுத்த முடியும். 1920*1080 பிக்சல் அளவில் படங்களை காணமுடியும். மேலும் வைஃபை வசதி கொண்டது. இதன் விலை 699 டாலர். அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.