சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பாப்போம். இதில் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200 மெகா பிக்சல் கொண்ட கேமரா இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புது போன்களை விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் புது வரவாக அமைந்துள்ளது எட்ஜ் 30 சீரிஸ் போன்கள்.எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பு அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- 6.67 இன்ச் ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 200 மெகா பிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
- நான்கு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்.
- 4610mAh திறன் கொண்ட பேட்டரி.
- டைப் சி சார்ஜிங் போர்ட்.
- 5 (13 பேண்ட்ஸ்) இணைப்பு வசதி.
- இந்த போனின் ஆரம்ப ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.59,999.
எட்ஜ் 30 ஃப்யூஷன் சிறப்பு அம்சங்கள்
- 6.55 இன்ச் திரை அளவு கொண்ட ஃபுல் ஹெச்.டிஸ்பிளே.
- மீடியாடெக் டைமன்சிட்டி 900U சிப்செட்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகா பிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
- 4400mAh திறன் கொண்ட பேட்டரி.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- டைப் சி சார்ஜிங் போர்ட்.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்.
- சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை ரூ.42,999.