புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ M5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது போக்கோ M4 மாடல் ஸ்மார்ட்போனின் அடுத்த வரிசையாக வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம் தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது போக்கோ. மொத்தம் நான்கு சீரிஸ்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. இதில் M சீரிஸ் வரிசையில் இப்போது இந்திய சந்தையில் M4 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே.
- மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
- முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
- 5000mAh பேட்டரி.
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி.
- 4ஜி இணைப்பு வசதி இடம் பெற்றுள்ளது.
- 5ஜி வெர்ஷன் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி + 128ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
- வரும் 13-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது.
- 4ஜிபி வேரியண்ட் ரூ.12,499 மற்றும் 6ஜிபி வேரியண்ட் ரூ.14,499-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருந்தாலும் இந்த போனின் விலையில் அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.