இந்தக் கருவியைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் இயக்க முடியும். மேலும் அலாரம் வைத்துக் கொள்வது, பாடல் கேட்பது போன்றவையும் செய்ய முடியும். இந்த கருவியின் எடை 250 கிராம்.
பயணக் குவளை
இந்த புதுவகை தண்ணீர் குவளையில் சூடான தண்ணீரையும் வைத்துக் கொள்ள முடியும். குளிர்ச்சியான தண்ணீரையும் வைத்துக் கொள்ள முடியும். இந்த குவளையின் உள்பகுதி பல்வேறு உலோகங்களால் காப்பிடப்பட்டுள்ளது.
பனிப் பிரதேச சைக்கிள்
அண்டார்டிகா போன்ற பனிப் பிரதேசங்களிலும் மலை பிரதேசங்களிலும் ஓட்டுவதற்காக இந்த சைக்கிள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளின் டயர்கள் மோட்டார் சைக்கிள் டயர்கள் போன்று அகலமாக உள்ளன.