சைக்கிள் திருட்டு எளிதானது. அப்படி செய்யமுடியாத வகையிலான சைக்கிளை சிலி பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிளின் சீட் பகுதியின் கீழ் உள்ள பிரேமை கழற்றி அதையே பூட்டாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
குழந்தையை கண்காணிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தை தூங்குகிறதா? நன்றாக மூச்சுவிடுகிறதா? என்பதை பற்றிய விவரங்களை இந்த கேமரா தருகிறது. இதை மொபைலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நவீன ஊன்றுகோல்
ஊன்றுகோல் உதவியுடன் நடப்பவர்கள் கையாளும் வகையிலான எளிதான கருவி இது. கடினமான கருவிகளால் ஊனமுற்றவர்கள் படும் சிரமங்களைக் குறைக்கிறது. இதை லேசர் பவுடேசன் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.
கோபுரோ ஹீரோ 5
பொதுவாக தண்ணீரில் பயன்படுத்துவதற்காக கோபுரோ கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் நம் பயணத்தின் போதுகூட இந்த கோபுரோ கேமராக்களை பயன்படுத்த முடியும். தற்போது கோபுரோ ஹீரோ வகை கேமராக்களில் 5-வது மாடல் வந்துள்ளது. 4கே திறனில் வீடியோ எடுக்க முடியும். மேலும் 33 அடி ஆழம் வரையில் இந்த கோபுரோ ஹீரோ 5 மாடலை பயன்படுத்தமுடியும். இந்த கேமராவின் மொத்த எடை 118 கிராம். மேலும் 12 எம்பி திறனில் புகைப்படங்களை எடுக்கலாம்.
கனவு மோட்டார் சைக்கிள்
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய மோட்டார் சைக்கிள் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. நாளைய மோட்டார் சைக்கிள் என்கிற கனவு திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளின் இயக்கம் முழுவதும் தானியங்கி முறையில் உள்ளது. எந்த விபத்துகளையும் ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் என்பதால் ஹெல்மெட்கூட அணியத் தேவையில்லை. வழக்கமான ஷாக் அப்சர்கள் கிடையாது. கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டு ஓட்டும்போது தேவையான கட்டளைகளை அதன் மூலமே கொடுக்கலாம்.