தொழில்நுட்பம்

பொருள் புதுசு: வயர்லெஸ் சார்ஜர்

செய்திப்பிரிவு

மவுஸ் பேட் அளவேயான இந்த அட்டையில் பல மின்னணு சாதனங்களை ஒயர் இணைப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இதன் சிறிய வடிவத்தை அனைத்து ரக கார்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

ஆட்டோமேட்டிக் அமேசான்

அமேசான் நிறுவனம் 2014-ம் ஆண்டிலேயே தனது பால்டிமோர் சேமிப்பு கிடங்கில் 50% ரோபோ பயன்பாட்டைக் கொண்டு வந்து விட்டது. தற்போது கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் ரோபோக்களே செய்கின்றன. ஆர்டர் பெறப்பட்டதும் அடுத்த ஒரு நிமிடத்தில் குறிப்பிட்ட பொருள் பார்சல் செய்யப்பட்டு கிடங்கிலிருந்து வெளியேறும் வகையில் ரோபோக்களின் செயல்பாடுகள் உள்ளன. பொருளுக்கேற்ற வடிவிலான பெட்டிகளை வைப்பதற்கு மட்டும்தான் ஆட்கள் வேலை செய்கிறார்கள்.

விண்வெளி சுற்றுலா

வர்த்தக ரீதியான விண்வெளி பயணத்துக்கு சீனா திட்டமிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்குகிறது ஜெப் பியோஸின் விண்வெளி ஆராய்சி நிறுவனமான புளு ஒரிஜின். இந்த விண்வெளி விமானம் தினசரி 20 பயணிகளுடன் கிளம்பி பூமிக்கு அப்பால் சென்று திரும்பும். இதற்கான கட்டணம் 2 லட்சம் டாலர் முதல் 2.5 லட்சம் டாலர் வரை இருக்கும். ராக்கெட்டை போல மேலே எழும் இந்த விண்வெளி ஓடம், விமானத்தை போல தரையிறங்கும் வகையில் இருக்கும்.

தூக்கத்தை அளவிடும் கருவி

தூக்கத்தை அளவிடும் கருவி இது. தூங்கும்போது தலையில் பொருத்திக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த உறக்கம், அல்லது உறக்கமின்மை போன்றவற்றையும், உறங்கும் நேரத்தில் நமது மூளையின் அலையையும் ஸ்மார்ட்போனில் பதிவு செய்யும்.

சோலார் கிளவுஸ்

வீட்டுக்கு வெளியே போனை பயன்படுத்தும் நேரங்களில் சார்ஜ் இல்லையென்று கவலைப்பட தேவையில்லை. சிறிய வடிவில் சோலார் பேனல் பொருத்திய கை கிளவுஸை மாட்டிக் கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொண்டே போனை பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT