புதுடெல்லி: சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4, வாட்ச் 5 சீரிஸ் மற்றும் TWS இயர்பட்ஸை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போன்களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக மடக்கும் வகையிலான ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் போன்கள் பார்க்கப்படுகின்றன. இந்த போன்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் முயற்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியாவில் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4 போன்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங். இருப்பினும் இப்போதைக்கு இந்த போன்களின் விலையை இந்தியாவில் அறிவிக்காமல் உள்ளது அந்நிறுவனம்.
கேலக்ஸி Z ஃபோல்ட் 4 சிறப்பு அம்சங்கள்
இது பார்க்க அப்படியே அதன் முந்தைய வெர்ஷனான கேலக்ஸி Z ஃபோல்ட் 3 போலவே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட், வெளிப்புற டிஸ்பிளே 6.2 இன்ச் ஹெச்.டி, உட்புற டிஸ்பிளே 7.6 இன்ச் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது இதன் பிரதான கேமரா, அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4440mAh திறன் கொண்டுள்ளது இந்த போனின் பேட்டரி.
கேலக்ஸி Z ஃப்ளிப் 4 சிறப்பு அம்சங்கள்
இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளே 1.9 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. இது நோட்டிபிகேஷன்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 6.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட்டை இந்த போனும் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் இரண்டு 12 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளது. 10 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் இதில் உள்ளது. 3,700mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் உள்ளது.