சென்னை: இந்தியா மற்றும் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிளேக் ஷிப் (Flagship) போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10T 5ஜி போனை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
நேரலை நிகழ்வு மூலம் இந்த போனின் அறிமுகம் அரங்கேறி இருந்தது. இப்போது இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் 6-ம் தேதி முதல் இந்தியாவில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
- 6.7 இன்ச் திரை அளவை கொண்டுள்ள இந்த போன் Fluid AMOLED டிஸ்பிளேவை பெற்றுள்ளது. இதன் ரெப்ரெஷ் ரேட் 120Hz.
- ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 புராசஸரை கொண்டுள்ளது இந்த போன்.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் துணையோடு ஆக்சிஜன்OS 12.1-இல் இயங்குகிறது இந்த போன். இந்த ஆண்டின் இதில் ஆக்சிஜன்OS 13 அப்டேட் கிடைக்குமாம்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்கத்தில் உள்ள செல்ஃபி கேமரா.
- 4800mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 150 வாட்ஸ் SUPERVOOC அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.
- 19 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
- வெளிர் பச்சை மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 5ஜி இணைப்பில் இந்த போன் இயங்கும். மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.49,999.
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.54,999.
- 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.55,999.