தொழில்நுட்பம்

தளம் புதிது: ஒலியை அளக்க...

சைபர் சிம்மன்

நீங்கள் இருக்கும் அறையில் அல்லது பணியாற்றும் சூழலில் உள்ள ஒலியின் அளவை சுவாரஸ்யமான முறையில் உணர்த்துகிறது ‘பவுன்சிபால்ஸ்’ இணையதளம். இந்த இணையதளத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள மைக்கை இணைத்தால், பயனாளிகளின் சுற்றுப்புற ஒலியை அளவிட்டுச் சொல்கிறது. திரையில் எம்பிக் குதிக்கும் பந்துகள் மூலம் இது உணர்த்தப்படுகிறது. அதிக இரைச்சல் இருந்தால், பந்துகள் அதிகமாக மேலெழும். அமைதியாக இருந்தால் அவையும் சலனமற்று இருக்கும்.

பள்ளி வகுப்பறை போன்ற சூழல்களில் இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குதிக்கும் பந்துகள் தவிர இமோஜிகள் உட்பட வேறு பல வழிகளிலும் ஒலியின் அளவை உணரலாம்.

இணையதள முகவரி: >https://bouncyballs.org/

SCROLL FOR NEXT