வரிசையாக 3 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்ட மோட்டோ ரோலா, அடுத்ததாக புதிய சாதனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஹெய்ஸ்ட் மோட்’ என் னும் இந்த சாதனம் கம்பியில்லாமல் ஸ்பீக்கர்களையும், மியூசிக் பிளேயர்களை யும் இணைக்கும் வசதியினை தருவ தாக உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட வயர்லெஸ் அடாப்டராக வேலை செய் யும் இந்த சாதனம் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், வின்டோஸ் என அனைத்து இயங்கு தளங்களுக்கும் ஏற்றவாறு வந்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கும் ஸ்பீக்கர்களுக்கும் இடையில்கூட கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்த முடியும். அதுவும் 300 மீட்டர் தொலைவு வரையில் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
இந்த சாதனத்தை ஒரே நேரத்தில் புளூடூத் மூலம் 5 மியூசிக் பிளேயர்களுடன் இணைத்துக்கொள்ள முடியுமாம்.