தொழில்நுட்பம்

பொருள் புதுசு: பேட்டரி சைக்கிள்

செய்திப்பிரிவு

ஜியோ என்கிற நிறுவனம் புதிய வகையிலான சைக்கிள் சக்கரத்தை வடிவமைத்துள்ளது. சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலான இந்த சக்கரத்தின் மூலம் மணிக்கு 20 கி.மீ வேகம் செல்லலாம். இதை ஒரு நொடியில் கழற்றி மாற்றலாம்.

ஸ்மார்ட் சார்ஜர்

இப்போது பரவலாகிவரும் வயர்லெஸ் சார்ஜரில் ஒரு நேரத்தில் பல போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியாது. அதுபோல அதை கவனமாகவும் கையாள வேண்டும். அந்த பயம் இல்லாமல் இந்த ஸ்மார்ட் சார்ஜரில் ஒரே நேரத்தில் பல போன்களை சார்ஜ் ஏற்றலாம்.

`குலுலு’ பாட்டில்

குழந்தைகளைக் கவரும் வகையிலான தண்ணீர் குடுவை. ஸ்மார்ட்போனுடன் இணையும் சென்சாருடன் இதன் பக்கவாட்டில் ஸ்கீரீன் உள்ளது. குழந்தைகளைக் கவரும் படங்களை `குலுலு’- வுக்கு அனுப்பி உற்சாகப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்கலாம்.

சீனாவின் புதிய பஸ்

சீனாவில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, புதிய வகையிலான பேருந்து வடிவமைப்பை வெளியிட்டுள்ளது சீன நிறுவனம் ஒன்று. `டிரான்சிட் எக்ஸ்ப்ளோர் பஸ்’ என்கிற இந்த பேருந்தின் மாதிரியை பெய்ஜிங்கில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் வைத்திருந்தனர். சாலையின் நடுவே வாகனங்கள் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையிலும், பயணிகளுக்கான இருக்கை பேருந்தின் மேல்தளத்திலும் உள்ளது. சாலையின் பக்கவாட்டில் உள்ள தண்டவாளங்கள் மூலம் இது இயங்கும்.

பயிர் பாதுகாப்பு

நிக்சர் டெக் என்கிற கனடாவைச் சேர்ந்த நிறுவனம் பயிர் பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. பண்ணைகள், தோட்டங்களில் பறவைகள், விலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க இந்தக் கருவி ஒருங்கிணைந்து செயல்படும். பழைய ஆண்டனா போல கம்பியை நீட்டிக் கொண்டிருக்கும் கருவி ஒன்று ஒலி எழுப்பிக் கொண்டே பறவைகளை விரட்டுகிறது என்றால், தரையில் உள்ள கருவி சிறு சிறு அதிர்வுகள் மூலம் சிறு விலங்குகளை அச்சறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT