புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது விவோ Y75 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகிறது சீன தேச நிறுவனமான விவோ. புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் Y75 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ.
பேட்டரி திறன், கேமரா, ஃபிளாஷ் சார்ஜ் வசதி என சிறப்பு அம்சங்களில் அசத்துகிறது இந்த போன்.
விலை & சிறப்பு அம்சங்கள்
இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை 20,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 31-ஆம் தேதி வரையில் செல்லும் என விவோ தெரிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போனை வாங்கலாம்.