தொழில்நுட்பம்

கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கூகுள் இணையதள நிறுவனம் மொழிபெயர்ப்பு சேவையை அளித்து வருகிறது. கூகுள் இணையதளத்தில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பு வசதியில் தமிழ், இந்தி, பெங்காலி, பிரெஞ்சு உட்பட உலகின் 133 மொழிகள் உள்ளன.

பயனாளிகள் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ எனப்படும் மொழிபெயர்ப்பு வசதி மூலம் தங்களுக்கு தேவையான மொழிகளை அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது மொழிபெயர்ப்பு வசதியில் சம்ஸ்கிருதம் உட்பட 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான கோரிக்கைகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு வசதியில் சம்ஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் 19 இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT