ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன். 
தொழில்நுட்பம்

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் | விலை & சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் (Realme Narzo) ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் நார்சோ லைன் அப்பில் அண்மைய வரவாக வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன். இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 28-ஆம் தேதி முதல் அமேசான், ரியல்மி வலைதளம் மற்றும் ரீடைல் சந்தையில் விற்பனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்.
  • 6.6 இன்ச் டிஸ்பிளே
  • ஆக்டா-கோர் யூனிசோக் T612 சிப்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா. AI சென்சார் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
  • 4ஜி இணைப்பு
  • டைப் சி சார்ஜிங் போர்ட்
  • 5000 mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 11,499 ரூபாய்க்கும், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 12,499 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT