உங்களுக்கு நீச்சலில் ஆர்வம் இருந்து, அதை மேம்படுத்திக்கொள்வதிலும் ஆர்வம் இருந்தால் இணையம் மூலமே அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் தெரியுமா? ‘எஃபொர்ட்லெஸ் ஸ்விம்மிங்’ எனும் யூடியூப் சேனல் இதைத்தான் செய்கிறது. இந்த சேனலில் நீச்சல் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன.
எல்லாமே நீச்சல் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் வீடியோக்கள். இவற்றைப் பார்த்து நீச்சல் தொடர்பான சின்னச் சின்ன நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். போட்டிக்குத் தயாராக என்றாலும் சரி, அல்லது உங்கள் நீச்சல் திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்பினாலும் சரி, இந்த வீடியோக்கள் உதவியாக இருக்கும். நீச்சல் நுணுக்கங்கள் விதவிதமான தலைப்புகளில் வீடியோக்களாக இடம்பெற்றுள்ளன.
வீடியோக்களை காண: >https://www.youtube.com/user/EffortlessSwimming/videos