தொழில்நுட்பம்

ஸ்விகி, சொமேட்டோ செயலிகள் சிறிது நேரம் முடங்கியதாக பயனர்கள் புகார்

செய்திப்பிரிவு

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவன செயலிகள் சில மணி நேரம் முடங்கியதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரை அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்திருந்தனர். இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டரை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவன செயலிகள் சில மணி நேரம் முடங்கியுள்ளது. இது ‘தற்காலிகம்’ என சொமேட்டாவும், இது ‘தொழில்நுட்ப சிக்கல்’ என ஸ்விகியும் தெரிவித்துள்ளது. மதிய உணவு இடைவேளை நேரமான 1.48 மணி அளவில் இரண்டு செயலிகளும் முடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த சமயத்தில் இந்த தளங்களின் பயனர்கள் மும்முரமாக உணவு ஆர்டர் செய்யவும், ஆர்டர் செய்த உணவை பெற்றுக்கொள்ளும் நேரமாகும்.

பயனர்கள் ரியாக்‌ஷன்

SCROLL FOR NEXT