தொழில்நுட்பம்

வீடியோ புதிது: மன அழுத்தம் அறிவோம்

சைபர் சிம்மன்

மன அழுத்தம் நாம் எல்லோரும் அறிந்ததுதான். பல நேரங்களில் நாம் அனுபவிப்பதும்தான். பலரும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களைக்கூட அறிந்திருக்கலாம். ஆனால் மன அழுத்தம் ஏற்படும்போது என்ன ஆகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது மன அழுத்தம் உண்டாகும் நேரத்தில் உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியுமா?

இந்தக் கேள்விக்கான பதில் அறியும் ஆர்வம் இருந்தால் மன அழுத்தம் பற்றி விளக்கம் அளிக்கும் ‘டெட்’ வீடியோ உங்களுக்குத் தெளிவை அளிக்கும்.

மன அழுத்தத்தின் முக்கியமான ஒரு அம்சம், நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கான அதிக விழிப்புணர்வு மற்றும் ஆற்றலை அளிப்பதாக இருக்கிறது எனத் தொட‌ங்கும் இந்த வீடியோ, சவாலான நிலையை அல்லது மிதமிஞ்சிய சூழலை எதிர்கொள்ளும்போது எல்லோரும் உணரும் ஓர் உணர்வு இது என்கிறது.

மேலும் விளக்கமாக அறிய:

</p>

SCROLL FOR NEXT