தொழில்நுட்பம்

காற்றை உறிஞ்சும் கருவி

செய்திப்பிரிவு

நமது பயணங்களின் தேவைக்கு ஏற்ப அதிக துணிகளை எப்போதுமே எடுத்துச் செல்லமுடியாது. காரணம் எவ்வளவு பெரிய பை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் உடைகளை வைக்க முடியும். அதிக உடைகள் தேவை என்றால் பெரிய பைகளை சுமக்க வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் கருவி இது. பெரிய பிளாஸ்டிக் பையில் உடைகளை அடைத்தபிறகு இந்த கருவியை நுழைத்து அதிலிருந்து காற்றை உறிஞ்சி விடலாம். இதன் மூலம் பை 50 சதவீதம் சுருங்கிவிடும். இது பேட்டரி மூலம் இயங்குகிறது.

பேக் ஸ்கூட்டர்

உருட்டிச் செல்லும் சூட்கேஸ் (டிராலி பேக்) வடிவில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி முறையில் இயங்கக்கூடிய இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒருவர் மட்டும் அமைந்து பயணம் மேற்கொள்ளலாம். பேக் வடிவில் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வதும் எளிது. ஒரு முறை இதை சார்ஜ் செய்தால் 22 கிலோ மீட்டர் வரை செல்லமுடியும்.

SCROLL FOR NEXT