நீங்கள் விரும்பியது போல இணைய வாக்கெடுப்பு நடத்த வழிசெய்யும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. ஒற்றைக் கேள்வி கேட்டு, அதற்கான பதிலைப் பெற, பலவிதமான வாய்ப்புகளை இந்தத் தளங்கள் மூலம் அளிக்கலாம். இதேபோல வரிசையாகப் பல கேள்விகளைக் கேட்க விரும்பினால், அதாவது நீங்களே இணைய வினாடி வினா நடத்த விரும்பினால் ‘குவிஸி’ இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.
வினாடி வினா நடத்த விரும்புகிறவர்கள் இந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டு, தங்களுக்கான கேள்விகளையும் அவற்றுக்கான பதில் தேர்வுகளையும் குறிப்பிடலாம். இதன் பிறகு இணையம் மூலமே வினாடி வினா நடத்தலாம்.
மேலும் அறிய: >https://www.quizzy.rocks/