உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள புதிய மென்பொருட்களைத் தெரிந்து கொள்வது அவசியமானது. மென்பொருட்களின் அறிமுகம் பற்றிக் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது 'ஆல்டர்நேட்டிவ்டு.நெட்' இணையதளம்.
பெயருக்கேற்ப இந்தத் தளம் மாற்று மென்பொருட்களை அறிமுகம் செய்கிறது. அதாவது ஒருவர் ஏற்கெனவே அறிந்த அல்லது பயன்படுத்தும் மென்பொருளுக்கான மாற்று மென்பொருளை அறிமுகம் செய்கிறது.
நல்ல மென்பொருட்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாக இது முன்வைக்கப்படுகிறது.
பிரபலமாக இருக்கும் மாற்று மென்பொருட்கள் மற்றும் செயலிகள் முகப்புப் பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. இவை தவிர மென்பொருள் வகைக்கேற்பவும் பட்டியல் உள்ளது. பயனாளிகளும் தாங்கள் அறிந்த மென்பொருட்களைச் சமர்ப்பிக்கலாம். இப்படிப் பலரது பரிந்துரையால் மென்பொருட்கள் பட்டியலிடப்படுவது இந்தத் தளத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது.
இணையதள முகவரி: >http://alternativeto.net/