கேட்ஜட்ஸ் உலகில் லட்சோப லட்சம் அப்ளிகேஷன்கள் இருந்தாலும், மனிதர்களின் அன்றாட வாழ்விற்கு பயன்படும் அப்ளிகேஷன்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுகிற அப்ளிகேஷன்கள் அத்தி பூத்தாற்போல் தான் பூக்கின்றன. அந்த வகையில் ஸ்பெயினின் எலிகன்ட் பல்கலைக்கழக மாணவர்கள், பார்வையற்றோருக்கான சிறப்பு அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால், பார்வையற்ற ஒருவர் நடந்து செல்லும்போது வழியில் ஏதாவது தடங்கல்கள் இருந்தால் அதை உணர்த்தும் விதமாக மொபைல் போன் வைபரேட் ஆவதுடன் பீப் ஒலியையும் எழுப்பும்.
இந்த அப்ளிகேஷனின் சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளதை அடுத்து விரைவில் மேலும் சில மாற்றங்களுடன் இந்த அப்ளிகேஷன் ஆப் ஸ்டோர்களுக்கு வரவுள்ளது.