தொழில்நுட்பம்

செயலி புதிது: உலக ரெஸ்டாரன்ட்கள்

சைபர் சிம்மன்

சுவையான உணவுக்கான புதிய ரெஸ்டாரன்ட் பற்றிய தகவல் தேவை எனில் உள்ளங்கையிலேயே கொண்டு வந்து தரக்கூடிய ஸ்மார்ட்போன் செயலிகள் அநேகம் இருக்கின்றன. ‘ரெஸ்டாரன்ட் ஃபைண்டர்’ கூட‌ இந்த ரகத்தைச் சேர்ந்தது என்றாலும் இதில் என்ன விஷேசம் என்றால் முன்பின் தெரியாத புதிய நகரங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ரெஸ்டாரன்ட்களை அடையாளம் காட்டுகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும்.

அமெரிக்கா, ஸ்பெயின், டென்மார்க், பிரான்ஸ், கனடா, மலேசியா, தாய்லாந்து, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் ரெஸ்டாரன்ட்களை அடையாளம் காட்டுவதாக உறுதி அளிக்கிறது. இந்தியாவும் இந்தப் பட்டியலில் இருப்பதால் நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பிடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள ரெஸ்டாரன்ட்கள் மற்றும் அங்கு கிடைக்கும் உணவு ஆகிய விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் நேரம் உள்ளிட்ட விவரமும் உள்ளன. ரெஸ்டாரன்ட் தவிர ஹோட்டல்கள், சூப்பர் மார்கெட் போன்ற விவரங்களையும் தேடலாம்.

SCROLL FOR NEXT