தொழில்நுட்பம்

பொருள் புதுசு: ஸ்மார்ட் மேஜை

செய்திப்பிரிவு

இந்த ஸ்மார்ட் டெஸ்க் பல தேவைகளுக்கு பயன்படுகிறது. எடை குறைவானது என்பதால் கையாளுவதும் எளிது. ஓவியம் வரைபவர்களுக்கு ஏற்றாற்போல் மடக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருப்பது கூடுதல் சிறப்பு.

சிலிண்டர் பர்ஸ்

உருளை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள பர்ஸ். பணத்தை மடிக்க வேண்டிய தேவை இல்லாமல் இதனுள் அப்படியே வைக்க முடிகிறது. இதனால் பணம் கசங்குவது போன்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

புகைப்பட சேமிப்பு

செல்போனில் அதிகமான புகைப்படங்களை சேமிக்க முடியாது. இதற்கான கருவி இது. போட்டோ மற்றும் வீடியோவை சேமிக்கலாம், 1 டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்டது. வை பை, யுஎஸ்பி வசதியும் இதில் இருக்கிறது.

கண்ணாடி சிப்

அமெரிக்காவின் சவுத்ஆம்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதிய மெமரி சிப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூப்பர்மேன் என்று பெயரிடப்பட்ட இந்த சிப் முழுவதும் கண்ணாடியிலானது. இந்த சிப் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை 100 கோடி ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும். ஒரு சிப்பில் 360 டெராபைட் தகவல்களை சேகரிக்க முடியும். அதாவது 22,500 ஐபோனில் சேகரிக்கும் தகவல்களை இதில் அடக்கலாம். 5டி வடிவில் இதில் தகவல்களை சேகரிக்க வேண்டும்.

ரோபோ பாட்டி

நேரத்துக்கு எழுவது, பல் துலக்குவது, சாப்பிடுவது, மருந்துகள் எடுத்துக் கொள்வது, என எல்லாவற்றுக்கும் வீட்டில் பெரியவர்கள் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அந்த கேள்விகளைக் கேட்கிறது இந்த ரோபோ. இந்த ரோபோவின் கண்களைப் போல உள்ள சென்சார் நமது நடவடிக்கைகளை கண்காணித்து பதிவு செய்கிறது. குழந்தைகள் என்ன செய்தார்கள் என்பதைக் கண்காணிக்க அம்மாக்களுக்கு இந்த ரோபோ உதவும்.

SCROLL FOR NEXT