வண்ணம் தீட்டும் புத்தகங்களைச் சிறுவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன? பெரியவர்களும்கூடத் தங்கள் இஷ்டம் போல வண்ணங்களைத் தீட்டி மகிழலாம். இதற்காகவே ‘கலர்ஃபை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படக்கூடிய இந்தச் செயலி அழகிய மலர்கள், விலங்குகள், அலங்காரங்கள் எனப் பல வகையான சித்திரங்களை அளிக்கிறது. இவற்றிலிருந்து விரும்பியதைத் தேர்வு செய்து, செல்போனிலேயே வண்ணம் தீட்டி மகிழலாம். நமக்குள் இருக்கும் குழந்தையை மீண்டும் கண்டுகொள்வதோடு மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள இது சிறந்த வழி என்று கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் இப்போது இந்தப் போக்குத்தான் பிரபலமாக இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: >http://colorfy.net/