இந்தியாவில் திருமணமான ஆண்களில் 8 நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் தான். இந்த கவுன்சின்லிங்கை தருவதற்கு ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்துள்ளது.
கூகிள் பிளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் தத்துவ மொழிகள், இந்தியா முழுவதும் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 தன்னார்வல அமைப்புகளின் தொலைபேசி எண்கள், குடும்ப பிரச்சினை களில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.