தொழில்நுட்பம்

நவீன நோட்புக்

செய்திப்பிரிவு

பேப்பர் நோட்புக்கில் எழுதுவதைப்போல, இந்த நோட்புக்கில் எழுதி அதை அப்படியே ஸ்மார்ட்போனுக்கோ, கணினிக்கோ அனுப்பிவிடலாம். நோட்புக்கில் செய்யும் அடித்தல் திருத்தல் என அனைத்து வேலைகளையும் இந்த நோட்டிலும் செய்யலாம்.

ஈஸி ஷால்

மண்வெட்டி போல பயன்படுத்தும் ஷாலை (shovel) எளிதாகக் கையாள வடிவமைக்கப்பட்டுள்ள கைப்பிடி இது. சுழலும் தன்மை கொண்டது. எல்இடி விளக்கைப் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளதால் இதன் மூலம் இரவிலும் வேலைகளைச் செய்யலாம்.

விஆர் கார்டு

ஒரு இடத்துக்குச் செல்லாமல், அந்த இடத்தின் புகைப்படம் மூலம் அங்கு இருந்த உணர்வைக் கொடுக்கும் அட்டை இது. 3டி முறையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வாழ்த்து அட்டை போல இதை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

பிரஷ் பாதுகாப்பு

பல்துலக்கும் பிரஷ்ஷை நவீன முறையில் பாதுகாக்கும் டப்பா இது. திறந்த வெளியில் வைப்பதற்கு பதில், இதில் வைத்து பிரஷ்ஷை மூடினால் நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளது இதை வடிவமைத்த நிறுவனம்.

SCROLL FOR NEXT