தொழில்நுட்பம்

ஸ்மார்ட் ஸ்ட்ரோலர்

செய்திப்பிரிவு

குழந்தைகளை பல இடங்களுக்கு தூக்கிச் செல்பவர்களுக்கு வந்ததுதான் ஸ்ட்ரோலர் என்கிற சக்கர நடைவண்டிகள். இதில் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டே செல்வதும் பலருக்கு சுமையாகத்தான் இருக்கும். நாம் கவனிக்காத சமயத்தில் குழந்தை கீழே இறங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை போக்கும் விதமாக வந்துள்ளது ஸ்மார்ட் ஸ்ட்ரோலர். எலெக்ட்ரானிக் முறையில் இயங்கும் இந்த ஸ்ட்ரோலருக்குள் குழந்தையை வைத்துவிட்டு பாதுகாப்பாக மூடிவிடலாம்.

மேலும் இதற்கான கண்ட்ரோல் பட்டனை வாட்ச் போல கைகளில் கட்டிக் கொள்ளலாம். கைகளால் தள்ளத் தேவையில்லை. நாம் நடந்தால் கூடவே தானவே பின்னால் வரும். ஓடினால் ஓட்டமாக வரும். குழந்தையை தூக்கிச் சென்ற இடத்தில், கவனக்குறைவாக போன் பேசிக்கொண்டே செல்கிறோம் என்றாலும் கவலையில்லை. இந்த ஸ்மார்ட் ஸ்ட்ரோலர் பின்னாலேயே வந்து கொண்டே இருக்கும்.

டிரைவர் இல்லாத கார்

லண்டனில் முதல் டிரைவர் இல்லாத வாகனம் ஹீத்ரூ விமான நிலைய 5வது முனையத்தில் ஓடத்தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு கோடை காலத்தில் லண்டன் நகரத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.

நவீன பேண்டேஜ்

கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல்லைக் கொண்டு ஸ்டெம்செல் பேண்டேஜ் தயாரித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதன் மூலம் காயங்களை, தழும்பில்லாமல் விரைவில் குணமாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

ஐ-நெயில்

விரல்களை விதவிதமாக நெயில் பாலிஷ் மூலம் அழகுபடுத்துபவர்களுக்கு என்றே இந்த ஐ-நெயில் இயந்திரம் வந்துள்ளது. நமக்கு விருப்பமான படத்தை இந்த இயந்திரம் மூலம் நெயில் பாலீஷாக வரைந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT